யாழ்ப்பாணம் ,நல்லூர் ,வேலணை பகுதிகளில் பியர் நுகர்வு 27% மாக குறைவடைந்துள்ளதாக மதுவரி திணைக்களம் தகவல்!

Monday, August 24th, 2020

யாழ்ப்பாணமதுவரித் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம் நல்லூர் ,வேலணை ஆகிய பகுதிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இவ்வருடம் கடந்த ஆறு மாதம் வரையிலான புள்ளிவிபரங்களின்படி பியர் நுகர்வு  27% மாக குறைவடைந்துள்ளதாக யாழ்ப்பாண மதுவரி திணைக்கள புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன

கடந்த 2019ம் ஆண்டு 21 லட்சத்துக்கு மேற்பட்ட லீட்டர் பியர் விற்பனை இடம்பெற்றதாகவும் எனினும் இவ்வருடம் கடந்த ஆறு மாத புள்ளிவிவரங்களின்படி  7லட்சத்து 42 ஆயிரம்லீட்டர்பியர் நுகர்வு மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் யாழ்ப்பாண மதுவரி திணைக்கள புள்ளிவிபரதகவல்கள் தெரிவிக்கின்றன

 அத்தோடு வைன் நுகர்வு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது  21% த்தால் குறைவடைந்துள்ளதோடு அதேபோல் வெளிநாட்டு சாராய நுகர்வும் 1.74 வீதத்தினால் குறைவடைந்துள்ளது உள்ளூர் சாராய பாவனை 2.6 வீதமாக அதிகரித்துள்ளது மேலும் யாழ்ப்பாணம் நல்லூர் வேலணை ஆகிய பகுதிகளில் யாழ்ப்பான மதுவரித் திணைக்களத்தின் ஆளுகையின் கீழ் 13 சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் 5 ஹோட்டல் விற்பனை நிலையங்களும் 6 ரெஸ்டூரண்ட் விற்பனை நிலையங்களும் காணப்படுவதாகவும் எனினும் கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது இவ்வருடத்தில் கடந்த ஆறு மாதம் வரையிலான புள்ளிவிபரங்களின்படி பியர்  பாவனை குறைவடைந்து ள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன

Related posts:

அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
மக்களுக்கான நலன்திட்டங்களில் அரசியல் பேதங்கள் அவசியமற்றவை – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தல...
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்ததால் பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும...