யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானம் – துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவிப்பு!
Monday, May 6th, 2024
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகள் கோரப்பட்டிருந்தன என அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஒரேயொரு முன்மொழிவு மாத்திரமே கிடைக்கப்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய விரைவில் இதற்கான யோசனை தயாரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
2.5 மில்லியன் பெறுமதியான சீனி மாயம்!
தண்டப் பணத்திற்கு எதிராக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் வேலை நிறுத்தப் போரட்டம்!
இலங்கை மக்களுக்கு இயன்றளவு ஆதரவையும் உதவியையும் வழங்க தயார் - சீன ஜனாதிபதி இலங்கையின் அரச தலைவரிடம் ...
|
|
|


