யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் கொரோனா – 15 சிறுவர்கள் உட்பட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
Thursday, June 3rd, 2021
யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் 15 பேர் உட்பட 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
இதன்படி யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில்,ஒரு வயது, ஒன்றரை வயது மற்றும் 3 வயது பச்சிளம் குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் 8, 9, 11, 14, 15 வயது சிறுவர்களுக்கும், 9, 10, 13, 14 சிறுமிகளுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். குடாநாட்டில் சிறுவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்படும் சந்தர்ப்பம் நாளுக்கு நாள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.
Related posts:
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவான பருவ கால மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் குடாநாட்டின்...
பரீட்சை நிலையங்களில் ஏதேனும் சுகாதார குறைப்பாடுகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள் - உயர்தர மாணவர்களு...
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகாத புகைப்படங்களாக மாற்றி பகிரப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு!
|
|
|


