யாழ்ப்பாணத்தில் விபத்து : இராணுவத்தினர் 15 பேர் காயம்!
Monday, April 26th, 2021
யாழ்ப்பாணம்- உரும்பிராய் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவத்தினர் 15 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
கைதடிப் பக்கமிருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம், இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற கன்ரர் வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்கள், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் சேதமடைந்த கன்ரர் வாகனம்,இராணுவ முகாமிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
வடக்கிற்கு மேலும் ஐந்து நாடாளுமன்ற ஆசனங்கள் அதிகரிக்கப்படவேண்டும்! - சுதந்திரக் கட்சி
வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக செப்டெம்பர் 06 மற்றும் 27ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன - நாடாளுமன்...
வறட்சியான காலநிலை - எலுமிச்சை பழத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு - நுகர்வோர் அவதி!
|
|
|


