யாழ்ப்பாணத்தில் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

Tuesday, April 3rd, 2018

யாழ்ப்பாண மாவட்டத்தில் தனித்துவமான மரபுரிமை அம்சங்களான ஆவுரஞ்சிக்கல், சுமை தாங்கிக்கல், கேணி, மடம், தெருமுடி மடம் போன்றவற்றை விபரணப் பலகையிட்டுப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்வி அமைச்சின் கீழான மத்திய கலாசார நிதியம் இதற்கான நடவடிக்கையை யாழ்ப்பாண கலாசார நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கவுள்ளது.

2016 ஆம் ஆண்டு நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த வகையில் இந்த நிதியத்தின் முக்கிய செயற்பாடுகளாக மரபுரிமைகள், கலாசாரங்களைப் பாதுகாத்தல், தொல்லியல் மையங்களின் அகழ்வாய்வு, மேலாய்வு, தொல்லியல் மையங்களை மறுசீரமைத்தல், தொல்பொருள் மையங்களை பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் போன்றன அமைந்துள்ளன. இதன் முதற் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தனித்துவமான மரபுரிமை அம்சங்களான ஆவுரஞ்சிக்கல், சுமைதாங்கிக்கல், கேணி, மடம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்டவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் பெருமளவு சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.

இவ்வாறான மரபுரிமைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விபரணப்பலகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மேற்படி விபரணப் பலகையிடல் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி சபைகளின் அனுமதியை யாழ்ப்பாண மத்திய கலாசார நிதியம் பெற்று வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும் - யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அம...
இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்க சீனா எப்போதும் தயாராக உள்ளது – சீன வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அ...
ஜனவரிமுதல் எரிவாயுவின் விலையை கணிசமாக உயர்த்த வேண்டிய தேவை ஏற்படும் - லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு!

ஒரே நாளில் உலகின் பலம்பொருந்திய பல நாடுகளின் இராஜதந்திரிகளுடன் சந்திப்பு - பசுமைப் பொருளாதாரத்தை கட...
இலங்கைக்கு எந்த தேவை இருந்தாலும் அதை பூர்த்தி செய்ய இந்தியா தயாராக இருக்கும் – இந்தியத் துணைத்தூதுவர...
மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு - அஸ்வெசும நலன்புரி...