யாழ்ப்பாணத்தில் பாடசாலை சார்ந்த 72 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டள்ளது !

ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா ஊழியர்கள் என யாழ் மாவட்டத்தில் 72 சதவீதமானவர்களுக்கு கொரோனாவுக்கான சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, யாழ் மாவட்டத்தில் பாடசாலை சார்ந்த 7 ஆயிரத்து 432 பேர் இதுவரை கொரோனாவுக்கான சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு நாடு முழுவதுமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம்முதல் இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ்ப்பாண மாவட்டத்தில் 51 ஆயிரத்து 390 பேர் இதுவரை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமரர் அமிர்தலிங்கத்தின் உருவச் சிலைக்கு ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பால...
பழைய காயத்தை மீண்டும் கிளறுவது நல்லிணக்கம் அல்ல - இதனால் நாட்டில் குரோத மனப்பாங்கு அதிகரிக்கின்றது எ...
நீரிழிவை கட்டுப்படுத்த புதிய மருந்தை கண்டுபிடித்த ருஹுணு பல்கலை ஆய்வுக்குழு!
|
|