யாழ்ப்பாணத்தில் பலத்த மழை!

யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்றையதினம் கடுங்காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது.இதன்காரணமாக சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் குடாநாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.அத்துடன் கடுங்காற்றுக் காரணமாக மின்கம்பங்கள் பல பிரதேசங்களில் சேதமடைந்துள்ளதால் சில பிரதேசங்களில் மின்தடை ஏற்பட்டதாகவும் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்துப் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் யாழ்.மாவட்டத்தில் நிலவிய கடும் வரட்சியான காலநிலையினை அடுத்து குடிநீரிற்குத் தட்டுப்பாடு நிலவியதுடன், கால்நடைகளும் பெரிதும் பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பரீட்சை பெறுபேறுகள் வெளியிடும் திகதி நிச்சயிக்கப்படும் -அமைச்சர் அகில விராஜ் காரியவசம்!
தகுதி வாய்ந்த அதிகாரி நியமிக்க அமைச்சர் உத்தரவு - விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர!
பொருளாதாரம் வலுவடைவதைக் காண்பிக்கும் நேர்மறை சமிக்ஞைகள் தென்படுகின்றன - மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்...
|
|