யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு!
Sunday, June 23rd, 2024
உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
நயினாதீவு ரஜமகா விகாரையில் நேற்று (22) மதியம் 2 மணியளவில் ஆரம்பித்த இந் நிகழ்விற்கு 27 நாடுகளில் இருந்து சுமார் 350 பௌத்த மத பிரதிநிதிகளின் வருகைதந்தனர்.
உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் தலைவர், உலக பௌத்த முன்னணியின் தலைவர், உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் பிரதிநிதிகள், உலக பௌத்த முன்னணியின் பிரதிநிதிகள், விகாராதிபதிகள், பௌத்த பிக்குகள், யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி, வடக்கு மாகாண கடற்படை தளபதி உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்
இந்நிகழ்வில் பல்வேறுபட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்ததுடன் ஞாபகார்த்த நினைவு முத்திரையும் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாட்டில் மீண்டும் திடீர் மின்தடை ஏற்படலாம் - இலங்கை மின்சார சபை பணிப்பாளர் அறிவிப்பு!
"இளைஞர் நாடகத்தை " சர்வதேச மேடைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் - அமைச்சர் நாமல் ராஜபக்ச உறுத...
உண்மையை ஆராயாமல் கருத்துக்களை வெளியிடுவது எதிர்கட்சி தலைவர் பதவி வகிக்கும் ஒருவருக்கு பொறுத்தமானதல்ல...
|
|
|


