யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை- தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!

இந்த வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் 4 ஆயிரத்து 178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், நோயாளர்களின் எண்ணிக்கை 871 எனவும் குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 846 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 224 நோயாளர்களும், கண்டியில் 190 நோயாளர்களும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ளனர்.
அத்துடன், இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் 255 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எச்சரிக்கை!
ரோந்து பணிகளை அதிகரிக்குமாறு கோரிக்கை!
வாக்காளராகப் பதிவு செய்து கொள்வதற்கு வீட்டு உரிமை தேவையில்லை - திர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னர் வா...
|
|