யாழ்ப்பாணம் நோக்கி வந்த புகையிரதம் தீப்பற்றியது!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த கடுகதிப் புகையிரதத்தில் ஏற்பட்ட தீயின் காரணமாக புகையிரதச் சேவை சில மணிநேரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த கடுகதிப் புகையிரதத்தின் இயந்திரத்தில் திடீரென ஏற்பட்ட தீயின் காரணமாக புகையிரத்தின் இயந்திரப் பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. உடனடியாக குறித்த சம்பவம் தெரியவந்ததை அடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. குறித்த சம்பவம் சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தையடுத்து ஒருமணிநேரம் புகையிரத சேவைகள் பாதிப்படைந்திருந்ததுடன் புகையிரதத்தின் இயந்திரப் பகுதியில் சிறு சேதங்கள் ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றது.
Related posts:
கொழும்பு பிரகடனம் ஜெனிவா உலக சுகாதார அமைப்பு மாநாட்டில்
எதிர்வரும் 20 ஆம் திகதி வங்கிகளுக்கு அரை நாள் விடுமுறை!
குற்றங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யும் முறை அறிமுகம் - பொதுமக்கள்...
|
|