யாழில் 10 கிலோ கேரளா கஞ்சாவுடன் 3 பேர் கைது!
Monday, March 18th, 2019
செம்மணி பகுதியில் 10 கிலோ கேரளா கஞ்சாவுடன் 3 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம், உடுத்துறைப் பகுதியைச் சேர்ந்த 3 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (17) இரவு 3 பேரும் 10 கிலோ கேரளா கஞ்சாவை கைமாற்றுவதற்கு வருகை தந்திருந்த போதே, யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன், 3 பேரையும் யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையும் முன்னெடுத்து உள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
00000000000000
Related posts:
பாடப்புத்தகங்களை அச்சிடும் பணியில் தனியார் நிறுவனங்கள்!
காலியாகவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் இடத்தை நிரப்ப பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல...
நலன்புரி வேலைத்திட்டம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு - ஜனாதிபதி உறு...
|
|
|


