யாழில் நிறைவுக் கட்டத்தில் உருளைக்கிழங்கு அறுவடை !
Saturday, March 17th, 2018
யாழ். மாவட்டத்தில் உருளைக்கிழங்கு அறுவடை நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் வலிகாமம் பிரதேசத்தில் பல ஏக்கர் நிலப் பரப்பில் உருளைக்கிழங்குச் செய்கை பயிரிடப்பட்ட நிலையில் பெரும்பாலான விவசாயிகள் உருளைக்கிழங்கு அறுவடையை செய்துள்ளனர்.
கடந்த மாத இறுதியில் உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரியை அரசாங்கம் 29 ரூபாவால் அதிகரித்திருந்தது. எனினும், வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்ட போது அரைவாசிக்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு அறுவடையை நிறைவு செய்திருந்தனர்.
உருளைக்கிழங்கு வரி அதிகரிப்பால் தற்போது ஒரு கிலோ உருளைக்கிழங்கு 65 ரூபா முதல் 70 ரூபா வரை விற்பனை செய்ய முடிவதாக விவசாயிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
Related posts:
1000 ஏக்கர் நிலப்பரப்பில் நீர் வாழ் உயிரின பூங்கா!
இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி நியமனம்!
விவசாய அமைச்சின் அதிகாரிகள் புரிந்துகொள்ள தவறியமையினாலேயே உரம் தொடர்பான பிரச்சினைகள் உருவாக காரணம் ...
|
|
|


