யாழில் டெங்கு காய்ச்சல் தீவிரம்!
Monday, June 25th, 2018
நாட்டின் 8 மாவட்டங்களில் மிக வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைய யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை, புத்தளம், குருநாகல், கொழும்பு, கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் கூறியுள்ளார்.
அத்துடன் இந்த மாதத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 23,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், பருவப்பெயர்ச்சி மழை காரணமாகவே டெங்குக் நோய் வேகமாக பரவியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
புகையிலைக்கு மாற்றுப்பயிராக மரமுந்திரிகை!
போதைப் பொருள் விவகாரம் – மாலைதீவு அரசுடன் இணையும் இலங்கை!
எரிவாயு விநியோகம் தொடர்பில் எந்த அச்சமும் தேவையில்லை - இன்றுமுதல் வழமையான விநியோகம் இடம்பெறுவதாக லிற...
|
|
|


