யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆவது நபரும் குணமடைந்தார்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வெலிகந்த சிறப்பு வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட மற்றுமொரு நபரும் பூரண குணமடைந்துள்ளார்.
அவர் இன்று யாழ்.போதனா வைத்திய சாலையின் அம்புலன்ஸ் வண்டியில் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்படுவார் என்று வைத்திய சாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
குறித்த நபர் தொடர்ந்து 14 நாட்கள் அவருடைய வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார்.
யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 5 ஆவது நபரும் குணமடைந்துள்ளார் என்றும் வைத்திய சாலை பணிப்பாளர் மேலும் தகவல் தெரிவித்தார்.
Related posts:
எதிர்கால சந்ததியினரை சிறந்த முன்னோடிகளாக மாற்றியமைக்க அனுபவங்கள் பாடமாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி!
சதொச வழக்கிலிருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் விடுதலை!
இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி அனுமதி!
|
|