யாழில் அரச-தனியார் பேருந்து நடத்துனர்கள் கைகலப்பு: மூவர் காயம் !

Saturday, December 10th, 2016

யாழ்.கோண்டாவில் – டிப்போப்  பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து நடத்துனர்களுக்கும், தனியார் பேருந்து நடத்துனர்களுக்குமிடையில் ஏற்பட்ட கைகலப்பில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சனிக்கிழமை(10) காலை-10 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை தனியார் பேருந்தை வழி மறித்து இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தின் 764 வழித்தட பேருந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகள் தனியார் பேருந்து மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இருதரப்புக்கிடையிலும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் மூன்று தனியார் பேருந்து நடத்துனர்கள், சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் ணனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமபவத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சாரதியொருவரைக் கோப்பாய்ப் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts:

வலி தெற்கு பிரதேச சபையின் வட்டாரங்களில் சேவை செய்ய விகிதாசார உறுப்பினர்களுக்கு அதிகாரம் இல்லை – தவி...
கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மேல் மாகாணத்தை முடக்குங்கள் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரச...
இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்தியா இணக்கம் - எரிசக்தி அமைச்சர் உதய கம்ம...