யாழின் பல பகுதிகளில் இன்று மின்தடை!
 Sunday, September 10th, 2017
        
                    Sunday, September 10th, 2017
            மின் விநியோக மார்க்கங்களின் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) காலை-08.30 மணி முதல் மாலை-06 மணி வரை மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மானிப்பாய், உடுவில் தெற்கு, ஆனைக்கோட்டை, மானிப்பாய் கார்கில்ஸ் பூட் சிற்றி, மானிப்பாய் வைத்தியசாலை, கல்வயல், மட்டுவில், சரசாலை, நுணாவில், பருத்தித்துறை வீதி, கொல்லங்கலட்டி, மாவைகலட்டி,  ஊரெழு,சுதந்திரபுரம், குட்டியப்புலம், நவக்கிரி, நிலாவரை, சிறுப்பிட்டி மேற்கு, கலைமகள், ஆவரங்கால், வாதாரவத்தை, பெரிய பொக்கணை, புத்தூர்,ஊரணி, வீரவாணி, தோப்பு, அச்சுவேலி ஆஸ்பத்திரி, அச்சுவேலி நகர், பத்தமேனி, கதிரிப்பாய், இடைக்காடு, வளலாய், தம்பாலை, செல்வநாயகபுரம், பிறவுண் வீதி, அரசடி வீதி, புகையிரதக் கடவையிலிருந்து தட்டாதெருச் சந்தி வரை, கே.கே.எஸ். வீதி நாச்சிமார் கோவிலிருந்து சிவன் கோவில் வரை, நாவலர் வீதியில் ஐந்து சந்தியிலிருந்து இலுப்பையடிச் சந்தி வரை, கஸ்தூரியார் வீதியில் அரசடி வீதிச் சந்தியிலிருந்து ஸ்ரான்லி வீதிச்சந்தி வரை, மானிப்பாய் வீதியில் ஓட்டுமடம் சந்தியிலிருந்து கே.கே.எஸ். வீதி வரை, அஸாதி வீதி, ஏ.வி. தம்பி லேன், பிரபங்குளம் வீதி, பொன்னப்பா வீதி, சிவலிங்கப் புளியடி, கன்னாதிட்டி, மணிக்கூட்டு வீதி, சிவன் பண்ணை வீதி, காதி அபூபக்கர் வீதி, கம்பஸ் லேன், தொழில்நுட்பக்கல்லூரி, பல்கலைக்கழகக் கல்லூரி,ஹரிகரன் அச்சகம் பிறைவேற் லிமிற்றேட்,, அண்ணாமலையான் சிறி இராகவேந்திரா என்ர பிறைசஸ் பிறைவேற் லிமிற்றேட், வியாபார அபிவிருத்தி முகாமையாளர் பி.எல்.சி, அச்சுவேலி தொழிற்பேட்டை, அச்சுவேலி   தொழிற்பேட்டை- 1, அச்சுவேலி தொழிற்பேட்டை-11 ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பிரதமருக்கு அதிகாரம் வழங்கும் யாப்புத்திருத்தத்தை ஏற்க முடியாது - வாசுதேவநாணயக்கார!
விவசாயத்திற்கு தேசிய கொள்கை - ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய!
கணித பாட கற்பித்தலை மேம்படுத்த விஷேட  திட்டம் - கல்வி அமைச்சு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        