யால தேசிய பூங்காவில் அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரிக்க தீர்மானம்!

Saturday, January 6th, 2018

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் மகிந்த அமரவீரவின் கோரிக்கைக்கு அமைவாக யால தேசியப்பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை 600 ஆக அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

சமீபத்திய விடுமுறை காலப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான உள்நாட்டு சுற்றுலா பிரயாணிகள் யால பூங்காவை பார்வையிடுவதற்கு வருகை தந்தனர்.

தற்பொழுது நாளாந்தம் இதற்குள் அனுமதிக்கப்படும் ஜீப் வாகனங்களின் எண்ணிக்கை காலைவேளைகளில் 250 ஆகவும் மாலை வேளையில் 250 ஆகவும் 500 வாகனங்களுக்கான அனுமதியே வழங்கப்பட்டிருந்தது.இதனால் சுற்றுலாப்பயணிகள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

இதன்காரணமாக கடற்றொழில் நீரியல்வளங்கல் அமைச்சரும் மகாவலி இராஜாங்க அமைச்சருமான மகிந்த அமரவீர , ஜனாதிபதி மற்றும் பிரதமர் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவிடம் விடுத்தகோரிக்கைக்கு அமைவாக இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts: