மோதலில் ஈடுபடுவோரை கட்சி பேதமின்றி கைதுசெய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு!

கொழும்பு காலி முகத்திடலிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்து தாம் முழுமையாக அறிந்திருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் நெருக்கடியைத் தணிக்க இந்த மோதல் உதவாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மோதலில் ஈடுபட்ட அனைவரையும் அரசியல் கட்சி வேறுபாடின்றி கைது செய்யுமாறும், மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறும் பாதுகாப்புப் படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் அந்தச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இத்தருணத்தில் சகல பிரஜைகளும் அமைதியாக நடந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மேலும் கேட்டுக் கொண்டார்.
000
Related posts:
நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை தற்காலிகமாக நிறுத்துமாறு பணிப்பு – பிரதமர்!
ஐநாவின் இலங்கை மீதான வாக்கெடுப்பு இன்று!
நுணாவில் பகுதியில் விபத்து - லான்ட் மாஸ்ரரில் பயணித்த நபர் உயிரிழப்பு!
|
|