மோட்டார் சைக்கிள் விபத்து – யாழ்ப்பாணத்தில் இளைஞனின் ஒருவர் பலி!
Saturday, May 28th, 2022
யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து யாழ் கொட்டடி நாவாந்துறை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக அறியவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 31 வயதுடைய நவரட்ணராஜா சங்கீத் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதேசம்யம் உயிரிழந்தவருடன் பயணித்தவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!
ஊரடங்கை தளர்க்கும் முன் உலக நாடுகள் கவனம் கொள்ள வேண்டும் – எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார அமைப்ப...
யாழ் மாநகர ஆளுகைக்குட்பட்ட உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை - மாந...
|
|
|


