மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்து – இளைஞன் பலி!
Tuesday, April 26th, 2022
யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரிக்கருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு இளவாளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரான 22 வயது இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், சைக்கிளில் பயணித்த மற்றுமொரு இளைஞர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தெல்லிப்பழை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
000
Related posts:
பல்கலை மாணவர்களின் கொலை வழக்கினை திசை திருப்ப முயற்சி! நீதிபதியின் விசேட உத்தரவு!
பரீட்சாத்திகளின் உரிய நேர வருகையின்மையால் ஒழுங்கமைப்பில் சிரமம் - மோட்டார் போக்குவரத்துத்திணைக்கள ஆண...
உருவாகின்றது கிளிநொச்சி நகரசபை - மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் விசேட கலந்துரையா...
|
|
|


