மைத்தி உள்ளிட்ட நால்வரின் சொத்து விபரங்களை சத்திய கடதாசி மூலம் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!
Thursday, November 2nd, 2023
உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 13 அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகள் இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட நால்வரின் சொத்து விபரங்களை சத்திய கடதாசி மூலம் நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, மற்றும் முன்னாள் அரச புலனாய்வு சேவை பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோரின் சொத்து விபரங்களையே சமர்பிக்குமாறு மேற்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த சொத்து விபரங்களை சத்திய கடதாசி மூலம் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்டஈடு செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அந்த உத்தரவை முழுமைப்படுத்த முடியாத நால்வருக்கே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


