மேல் மாகாணத்தில் கட்டுப்பாட்டுக்குள் வந்தது கொரோனா தொற்று : சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் சுகாதார சேவைகள் பிரிவினர் மிகச் சிறப்பான முறையில் ஈடுபட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், மே 4 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவது தொடர்பில் தற்போது கூறமுடியாதுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இத்துடன் வெசாக் உற்சவ நாட்களில் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என்பதோடு அதனைத் தொடரந்து வரும் நாட்களும் சுகாதார துறையினர் வழங்கும் ஆலோசனையின் படி மக்கள் செயற்படுவது அவசியம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிறப்பு அதிதிகளின் வாகனங்களுக்கு புதிய சட்டம்!
யாழ்.மாநகரின் அபிவிருத்திகள் யாவும் முன்னுரிமையுடன் கூடிய தேவைகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட வ...
போதைப் பொருள் குற்றச் சாட்டு - சட்டத்தை அமுல்படுத்துவதற்கு மேல் நீதிமன்றம் - நீதி அமைச்சர் விஜயதாச ர...
|
|