மேலும் 124 உயிரிழப்புகள் பதிவு – இலங்கையில் கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 464 ஆ உயர்வு!.
Thursday, August 12th, 2021
கொரோனா தொற்றின்காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 464 ஆக பதிவாகியுள்ளது.
கொரோனா தொற்றினால் மேலும் 124 பேர் உயிரிழந்துள்ள நிலையில். இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 2 ஆயிரத்து 987 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 42 ஆயிரத்து 79 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 3 இலட்சத்து 406 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 36 ஆயிரத்து 209 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரிசித் தட்டுப்பாட்டுக்கு இடமளிக்கப்பட மாட்டாது - அமைச்சர் றிஷாத் !
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்கான வைத்தியசாலைகள் தயார்!
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படை !
|
|
|


