மேலும் 07 அமைச்சர்கள் பதவியேற்பு!
Thursday, November 8th, 2018
பொது நிர்வாகம் வீட்டு விவகாரங்கள் மற்றும் நீதி அமைச்சராக சுசில் பிரேமஜயந்த ஜனாபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
அதேபோல் பந்துல குணவர்தன சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும், எஸ்.எம்.சந்திரசேன சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராகவும் பதவி பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக லக்ஷமன் வசந்த பெரேரா பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
மேலும், சுதேச மருத்துவதுறை இராஜாங்க அமைச்சராக சாலிந்த திசாநாயக்கவும், போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக சி.பி ரத்நாயக்கவும் மற்றும் அனுர பிரியதர்சன யாபா நிதி இராஜாங்க அமைச்சாரகவும் பதவி பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
மாணவி வித்தியா கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!
யாழில் மாற்றுப்பாலின சமூகத்தினருக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டித்து விழிப்புணர்வு பேரணி!
இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை நீக்கியது இந்தியா!
|
|
|


