மேலும் ஒரு மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!

Saturday, May 29th, 2021

இலங்கைக்கு மேலும் ஒரு மில்லியன் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் – அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபத்தினால் சீன அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமைய இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாக கூறியுள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் ஜுன் மாதம் 6 ஆம் திகதி குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

15 அமெரிக்க டொலர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாளை ஞாயிறுமுதல் சினோபோர்ம் தடுப்பூசி முதற்தடவையாக வடக்கிற்கு விரிவடையவுள்ளது.

வட மாகாண சுகாதார அதிகாரிகள் தடுப்பூசி வழங்கும் நிலையங்களை இறுதி செய்து அறிவித்த பின்னர் யாழ் மக்கள் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: