மேலும் இரு ‘ரொக் டீம்’ சந்தேக நபர்கள் கைது!
 Monday, May 23rd, 2016
        
                    Monday, May 23rd, 2016
            
யாழ். குடாநாட்டில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் ‘ரொக் டீம்’ உடன் தொடர்புடைய மேலும் 2 பேர் கைது செய்யப்படடுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று (22) மாலை கைது செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்து வாள் ஒன்றும், நீண்டகத்தியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கந்தரோடை மற்றும் தெல்லிப்பளை ஆகிய பகுதிகளை சேர்ந்த 17 வயதான இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பில் கல்விப் பயிலும் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரொக் டீம் உடன் தொடர்புடைய சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
4 ஆம் நிலையில் இலங்கை : பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்க தனது நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரி...
இந்திய நிதி அமைச்சர் - இலங்கை உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு - கடன் மறுசீரமைப்பிற்கான உத்தரவாதத்தை வழ...
துரித உணவு கலாசாரம் - தொற்றா நோய்கள் அதிகரிப்பு -  வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என சுகாதா...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        