மேலதிகமாக மாணவர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை!

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு மேலதிகமாக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
2016 – 2017 ம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கான Z புள்ளிகள் நேற்று (06) வெளியாகியிருந்தன.இதன்பிரகாரம் 14 பல்கலைக்கழகங்கள் மற்றும் வவுனியா,திருகோணமலை ஹொரணை, உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கு, மேலதிக மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இதன்பிரகாரம் 29,696 மாணவர்கள் மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பமாகவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தொற்று குணமாகி இரு வாரங்களின் பின்னர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதே பயனுடையது - பிரதி சுகாதார பணிப்...
கொரோனாவால் மரணிப்பவர்களுள் 40 வீதமானோர் முஸ்லிம்களாக இருப்பது கவலைக்குரிய – தடுப்பூசிகளை விரைவாக பெற...
அமெரிக்க ஆய்வுக் கப்பலை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க முடியாது - கோரிக்கையை நிராகரித்தது இலங்கை அரசு!
|
|