மூன்று நாட்களுக்கு மேல் எனின் பேருந்து அனுமதிப்பத்திரம் இரத்து – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!

மூன்று நாட்களுக்கு மேல் சேவையில் ஈடுபடுத்தப்படாது போராட்டத்தில் பங்கேற்கும் தனியார் பஸ்களின் அனுமதியை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
வீதிப் போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகை அதிகரிப்பிற்கு எதிராக தனியார் பஸ் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளன. குறித்த நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்படும் பணிப் புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்து மூன்று நாட்ளுக்கு சேவையில் ஈடுபடுத்தப்படாத பஸ்களின் அனுமதியை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த பணிப் புறக்கணிப்பு போராட்டம் குறித்து போக்குவரத்து அமைச்சர் அமைச்சரவையில் விளக்கம் அளித்துள்ளார். இதன் போது பஸ்களின் அனுமதியை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பயணிகள் போக்குவரத்தில் பஸ்களை ஈடுபடுத்த அனுமதி வழங்குமாறு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கோரி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இரத்து செய்யப்படும் அனுமதிகள் உரிய நடைமுறையின் அடிப்படையில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தவர்களுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|