மூன்றாண்டுக்கான துரித அபிவிருத்தி திட்டம்!

Wednesday, August 9th, 2017

அனைத்து அமைச்சுக்களினாலும் எதிர்வரும் 3வருட காலப்பகுதியில் மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ள உத்தேச அபிவிருத்தி ஆலோசனைகளை விரைவாக திறைசேரிக்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் ஆலோசனையின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை தயாரிக்கும்நோக்கில் இந்த ஆலோசனைகள் கோரப்பட்டள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க தெரிவித்தார்.

 இதற்கு மேலதிகமாக புதிய அபிவிருத்திக்கான ஆலோசனைகள் அதற்கு தேவையான செலவுகள் குறித்த மதிப்பீடு , பணியாளர் எண்ணிக்கை ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடுமாறு திறைசேரி வழங்கியுள்ள ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து அமைச்சுக்களுக்கிடையில் தொடர்புகள் ஏற்படுத்தப்படவேண்டும். ஒவ்வொரு அமைச்சும் மேற்கொள்ளும் பொதுவான செயற்பாடு இருக்குமாயின் அவை தொடர்பில் தெளிவும் சம்பந்தப்பட்ட அமைச்சு இதுதொடர்பான விடயங்களையும் கொண்டிருக்கவேண்டும் என்று செயலாளர் மேலும் விபரித்துள்ளார்.

Related posts: