முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்துள்ளது – அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

இலங்கையில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை அரசாங்கம் இன்று உறுதி செய்துள்ளது என அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனைத்து இலங்கையர்களும் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்ய அரசுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து சில சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், அதிகாரிகளால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் எந்த குறிப்பிட்ட சமூகத்தையும் குறிவைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
தாங்கள் பொறுப்புள்ள அரசு என்றும் முஸ்லிம்கள், தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் உட்பட நாட்டின் அனைத்து சமூகங்களின் நலன்களையும் தாங்கள் கவனிப்போம் என்ற உண்மையை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0000
Related posts:
முக்கிய கோரிக்கை.!
எதிர்வரும் 22ஆம் திகதி ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இலங்கை கடற்படையிடம்!
மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் 96 ஆயிரத்து 329 சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை - சுற்றுலா அபிவிருத...
|
|