முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களில் 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதிகளை வழங்க நடவடிக்கை !

Friday, May 21st, 2021

கொரோனா தொற்றால் முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களுக்கும், வெள்ளப்பெருக்குக்கு முகங்கொடுத்துள்ள பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் அந்தந்தப் பிரதேச செயலகங்களூடாக 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை அமைச்சின் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கொரோனா வைரஸ் தொற்றால் முழுமையாக முடக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களுக்கும், வெள்ளப்பெருக்குக்கு முகங்கொடுத்த பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதி வழங்கப்படும்.

இந்த நிவாரணப்பொதியானது அந்தந்தப் பிரதேச செயலகங்களூடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிவாரணமாக பணம் வழங்கப்படுவதற்குப் பதிலான நிவாரணப் பொதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலகங்கள் இப்பொருள்களைக் கொள்வனவு செய்து அவற்றை மேற்குறித்த பிரதேச மக்களுக்கு இலவசமாக வழங்கும்.

சந்தைகளில் தற்போது காணப்படும் பொருட்களின் விலைகளை விட குறைவான விலைக்கு சதொச ஊடாக நிவாரணப் பொதி வழங்கப்படும்.

வெள்ளை நாட்டரிசி 10 கிலோ, சிவப்பரிசி 5 கிலோ, மா 3 கிலோ, நூடில்ஸ் 1கிலோ , பருப்பு 2 கிலோ, சீனி 2 கிலோ, தேயிலை 200 கிராம், சோயமீட், மிளகாய்தூள், பிஸ்கட் , முகக் கவசம் 10, தொற்று நீக்கி உள்ளிட்ட பொருள்கள் இப்பொதியில் காணப்படும். இதேவேளை ஏனைய சுப்பர் மார்க்கட்டுக்களில் இதனை கொள்வனவு செய்தால் இப்பொதிக்கு 5 ஆயிரத்து 960 ரூபாய் செலவிட வேண்டுமெனவும், எனினும் இதனை 5000 ரூபாய்க்கு அரசாங்கம் இலவசமாக வழங்குகிறது என்றும் அவர் கூறினார்

Related posts: