முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி செலுத்தியுள்ளது!
Thursday, December 7th, 2017
முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி செலுத்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தை உள்ளடக்கிய புதுக்குடியிருப்பு, கரைதுரைப்பற்று, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அத்தியட்சர் அலுவலகத்தில் இன்றையதினம் செலுத்தப்பட்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகச் செயலாளர் ஜெயராஜ் (கிருபன்) தலைமையிலான குழுவினர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
இதனிடையே குறித்த மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுரைப்பற்று பிரதேச சபைகளுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் இறுதியாக 2006 ஆம் ஆண்டு நடைபெற்றது என்பதுடன் இதில் புதுக்குடியிருப்பு உள்ளூராட்சி மன்றத்தை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி நிர்வகித்திருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
கடினமான சந்தர்ப்பங்களில் ஒன்றாக இருந்த, ஒரு நோக்கத்திற்காக போராடிய எவரையும் கைவிட முடியாது - பிரதம...
தரமான பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்யுங்கள் - ஏற்றுமதியாளர்களிடம் வர்த்தக அமைச்சர் கோரிக்கை!
13 ஆவது திருத்தத்தை உரியமுறையில் அமுல்ப்படுத்த வேண்டும் - மார்ச் 12 இயக்கம் வலியுறுத்த முனைந்தது ஒரு...
|
|
|


