முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
 Saturday, June 5th, 2021
        
                    Saturday, June 5th, 2021
            
முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 577 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, 346 பேர் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் 231 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 35 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 62 பேரும் , கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 115 பேரும், துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 10 பேரும், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 05 பேரும், மணலாறு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 04 பேருமாக 231 பேர் தொடர்ந்து கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேவேளை, ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 02 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 300 பேரும் , கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 13 பேரும் ,துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 19 பேரும், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 12 பேருமாக 346 பேர் கொரோனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவொருபுறமிருக்க, முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய 1224 குடும்பங்களை சேர்ந்த 3179 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        