முல்லைத்தீவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்!

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் பணி நேற்று ஆரம்பமானது. முல்லைத்தீவு மாவட்டத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலையில் இந்தப் பணி தொடங்கியது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற முடியும் என்று கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.
முதல் கட்டமாக புதுக்குடியிருப்பு, வெலிஓயா பகுதிகளில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நேற்று தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் இரண்டாம் திகதி இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் புதிய அரசு ?
காலநிலை தொடர்பில் முக்கிய எச்சரிக்கை!
இலங்கையின் நிதிச்சுமையை குறைக்க உதவும் வகையில் கடனுக்கு கால அவகாசம் வழங்க இந்தியா யோசனை!
|
|