முறையான சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சுதந்திர கட்சி தயார் – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு!

Monday, August 29th, 2022

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து முறையான சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மஹரகமையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தை மொட்டு கட்சித் தலைவர்களே வழிநடத்துகின்றனர். சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. ஆகையால் எதிர்காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து ஸ்திரமான சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:

யாழ்ப்பாணத்தில் சமூகத் தொற்று ஏற்படவில்லை: ஆனாலும் சுகாதார வழிமுறைகளை இறுக்கமாக பின்பற்றுங்கள் - வட...
கொரோனா அச்சுறுத்தலால் யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் கல்வி வலய அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை...
2023 ஆம் ஆண்டில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள் - தேசிய சிறுவர் பாதுகாப்பு அத...