முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை முறைப்பாடு!
Sunday, December 25th, 2016
முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் மத்திய வங்கியின் நிதிச்சபை முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது. இந்த முறைப்பாட்டை அடிப்படையாக் கொண்டு விசாரணை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நாளாந்தம் ஆலோசனைகளை வழங்கியதாக சட்ட மாஅதிபர் ஜயந்த ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இதன்பிரகாரம் தண்டனை சட்டக் கோவையின் கீழ் இந்த விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய முறை குறித்தும்வாக்குமூலம் பதிவு செய்யவேண்டியவர்கள் தொடர்பாகவும், சட்டமாஅதிபர் திணைக்கள அதிகாரிகள் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசாரணையின் பின்னர் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க முடியும் என சட்டமா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
அடுத்த 10 ஆண்டுகளில் உலகளவில் 5 மில்லியனுக்கும் குறைவான பெண் குழந்தைகளே பிறக்கும் - சர்வதேச ஆராய்ச்ச...
ஜனவரி 17 இல் 2023 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில...
பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர் அனைத்து கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்...
|
|
|


