முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் யாப்பாணத்தில்!

Friday, September 23rd, 2022


தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும்  முரண்பாடு நிலை மாற்றத்திற்கான பன்மைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த் செயற்பாட்டு திட்டத்தில் யாழ் மாவட்ட இளம் தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும சமூக மட்ட தலைவிகள் இணைந்து பொருளாதார செயற்பாடுகள் பாரபட்சம் காட்டுதலுக்கு உள்ளாவதால் தனிநபர் சமூக நல்லுறவு மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்படும் அழுத்தம் தொடர்பாகவும் அதனை குறைப்பதற்காக பல்வேறு சமூகத்தவர்கள் ஊடாக மேற்கொள்ளக்கூடிய உடனடி பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் .செந்துராசா தலைமையில் 22.09.2022  இன்று SOND அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் வசதிப்படுத்துநர்களாக யாழ் மாவட்ட சர்வமத சமாதான செயற்குழுவின் இணைப்பாளர் தகெளரிரூபன்  SOND நிறுவன நிர்வாக உத்யோகத்தர் திருமதி.ஜீனஸ் றெஜிந்தன் ஆகியோர்  கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts:


பாடசாலை மாணவர்களுக்கான சீருடை, வவுச்சர், பாடப் புத்தகங்கள் - கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர்!
இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க இயன்றவரை அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்படுகிறது - கடற்படை ப...
ஆளுமை இருந்திருந்தால் ஶ்ரீதரன் அன்றே செய்திருக்கலாம் – இன்று பேசுவது அரசியலுக்காக மட்டுமே - ஈ.பி.டி....