முன்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானம்!

சிலாபம் ஸ்ரீ முன்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற முன்னேஸ்வர ஆலய உற்சவம் தொடர்பான கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.
தற்போதைய கொவிட்19 தொற்று பரவலை கருத்திற்கொண்டு சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய, ஆலய குருமாரின் பங்குபற்றுதலுடன் ஆலயத்தினுள் மாத்திரம் சமய அனுஷ்ட்டானங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
சாரதி அனுமதிப்பத்திர நிபந்தனைகளை வெளிப்படுத்தினார் அமைச்சர் ராஜித!
வார இறுதி நாட்களில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு பிறப்பிக்கம் எண்ணம் கிடையாது - பிரதி பொலிஸ்மா அதிபர் அ...
தலைமன்னாரிலிருந்து கிழக்கு மாகாணத்துக்கு புதிய எண்ணெய் குழாய் இணைப்பு - இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ...
|
|