முன்கூட்டியே அனர்த்தத்தை உணர்ந்துகொண்ட நாய்கள்!

மீதொட்டமுல்ல ஸ்ரீ ராஹூல வித்தியாலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள குப்பை மேடு சரிந்து பாரிய அனர்த்தம் இடம்பெற்றது. குறித்த அனர்த்தம் தொடர்பில் அந்தப் பிரதேசத்தில் இருந்த நாய்கள் முன்கூட்டியே தெரிந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் இதுவரையில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலியானோர் எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.குப்பை மேடு சரிந்து வீழ்ந்ததில் சொத்துக்களுக்கு மிகப் பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அனர்த்தம் ஏற்படுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே அந்தப் பகுதியில் இருந்த நாய்கள் அதனை உணர்ந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்கள் இதனைத் தெரிவிக்கின்றனர்.அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னதாக நாய்கள் பாரிய சத்தத்துடன் குரைத்துள்ளன.அத்துடன் அந்த இடத்தை விட்டு வெளியேறிச் சென்றுள்ளன.சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நாய்கள் கூட அவற்றை அறுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேற முயற்சித்துள்ளன.
குப்பை மேடு சரிந்து வீழ்ந்து சில மணித்தியாலங்களின் பின்னர் மீளவும் நாய்கள் அந்த இடத்திற்கு வந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
Related posts:
|
|