முதல் தவணை ஆரம்பத்தில் வவுச்சர்கள் – கல்வியமைச்சு!

2020ம் ஆண்டு கல்வியாண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், சீருடை மற்றும் பாதணி வவுச்சர்கள் பெற்றுக் கொடுக்கப்படும் என, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்காக வவுச்சர்களை தற்போது, பாடசாலை மற்றும் பிரதேச அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
பொருளாதார துன்பத்துக்கு உள்ளாகியுள்ள மாணவர்களுக்கு பாதணிகளை வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய அதற்கான வவுச்சர் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் சட்டம், ஒழுங்குகள் அமைச்சர்!
புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளை சிவில் உடையில் சேவை- அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!
கொழும்பில் காற்று தரச்சுட்டெண் அளவு சற்று அதிகரிப்பு!
|
|