முதல் தடவையாக வீதிச் சோதனை கடமைகளில் பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள்!

இலங்கையில் முதல் தடவையாக 8 பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் வாகன சோதனைகள் உள்ளிட்ட காவல்துறை போக்குவரத்து பிரிவு கடமைகளுக்காக இணைக்கப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் கடந்த 24 ஆம்’ திகதியன்று பொலன்னறுவை பிரதேச சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஷாந்த சில்வா தலைமையில் இடம்பெற்றது.
இந்த 8 உத்தியோகத்தர்களும் பொலன்னறுவை காவல்துறையின் உந்துருளி மற்றும் வாகனப் பிரிவுகளில் கடமைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
வாகன சோதனைகள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்து உள்ளிட்ட விடயங்களில் பயிற்சி பெற்ற இந்த பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் கடந்த 24 ஆம் திகதிமுதல் உத்தியோகபூர்வமாக கடமைகளில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
புதிய தண்டப் பணமொன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!
ஏப்ரல் 9ஆ ம் திகதியுடன் முதலாம் தவணை நிறைவு - கல்வி அமைச்சு!
தெற்காசியாவில் வீதி விபத்துக்களால் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியில் இலங்கை முன்னிலை - விபத்துகளை கு...
|
|