முதல்முதலாக இலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை கிளிநொச்சி அறிமுகம்!
Saturday, September 19th, 2020
இலங்யைில் முதல்முதலாக இலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு நேற்றையதினம் காலை கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் இடம்பெற்றது.
கண்டாவளை பிரதேச செயலாளரின் முயற்சியில் அப்பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில், குறித்த இலத்திரனியல் குடும்ப அட்டை உருவாக்கப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக ஓர் குடும்பத்தின் சகல விபரங்களையும் உள்ளடக்கி இலத்திரனியல் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த இலத்திரனியல் குடும்ப அட்டையை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். பின் பொதுமக்களிற்கு குறித்த இலத்திரனியல் அட்டை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலகின் அனைத்து நாடுகளுடனும் நெருங்கிய நட்புறவை பேணுவதே தமது நோக்கம் - ஜனாதிபதி!
இன்னும் கொரோனா அச்சம் நீங்கவில்லை - இலங்கையை எச்சரிக்கும் சுகாதார பணிப்பாளர்!
ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
|
|
|


