முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வழிகள் குறித்து அமெரிக்க தூதுவருடன் அமைச்சர் நாமல் கலந்துரையாடல்!
Wednesday, June 30th, 2021
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸுடன் அமைச்சர் நாமல் ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த நேற்றையதினம் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின்போது இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் கிடைக்கும் பல வாய்ப்புகள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வழிகள் குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருடன் கலந்துரையாடியுள்ளதாக இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ச கருத்துத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பதோடு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கும் எதிர்பார்த்துள்’ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆகக்கூடிய சம்பளத் கொண்ட தொழிற்துறையாக ஆசிரியர் துறை தரம்உயர்த்தப்படும் - கல்வி அமைச்சர்!
விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு புதிய கடன் திட்டம் - அமைச்சர் மஹிந்த அமரவீர!
மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக தொடரப்படுகின்றது வழக்கு - மின் பாவனையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
|
|
|


