முதலாவது மிதக்கும் சூரிய சக்தி அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்து!
Thursday, June 1st, 2023
இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய சக்தி அபிவிருத்தி செயற்திட்டத்திற்காக கொரிய தொழில்நுட்ப அபிவிருத்திக்கான நிறுவனத்துடன் மின்சக்தி அமைச்சு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
இது தொடர்பாக ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ள விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நிலைபெறுதகு வலு அதிகார சபைக்கு 5.2 மில்லியன் டொலர்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
சப்ரகமுவ மாகாணத்தில் சந்திரிகா குளம் மற்றும் ஊவா மாகாணத்தின் கிரிஇப்பன்ஆர குளத்திற்கு அருகாமையில் கொரிய பொறியியல் நிறுவனத்தினால் மிதக்கும் சூரிய சக்தி அபிவிருத்தி செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த அபிவிருத்தித் திட்டத்தை அடுத்த வருடம் டிசம்பர் மாதத்தில் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த வீடுகளை அமைக்கும் பணி ஆரம்பம்!
கடற்றொழிலாளர்களுக்கு புதிய அடையாள அட்டை - விவசாய கடற்றொழில் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சின் செ...
சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 60 வீதமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்டவர்கள...
|
|
|
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நாளை: இன்று முற்பகல் 10 மணியுடன் போக்குவரத்து தடை!
நான் சமூகங்களுக்கிடையில் ஒரு பாலமாக இருக்க விரும்புகிறேன் - குற்றச்சாட்டுகளை யோசித்துக் கொண்டிருக்க ...
நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - இலங்கை பொது...


