முதலாம் திகதிமுதல் இணையவழி பற்றுச்சீட்டு வழங்க நடவடிக்கை – மின்சார சபை அறிவிப்பு!.
Wednesday, June 28th, 2023
அடுத்த மாதம் முதலாம் திகதிமுதல், மூன்று பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு ‘ஈ’ பில் எனப்படும் இணையவழி பற்றுச்சீட்டு வழங்கப்பட உள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, களனி, ஸ்ரீ ஜயவர்த்தனபுர மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளுக்கே இணையவழி பற்றுச்சீட்டு வழங்கப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் முறைமையில் குறித்த பகுதிகளுக்கு மாதாந்த மின்கட்டண பற்றுச்சீட்டு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
குடாநாட்டின் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த அரசு நடவடிக்கை!
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறமுடியும் - பொதுஜன பெரமுன நம்பிக்கை!
தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் செயற்கை நுண்ணறிவு - கல்வி அமைச்சு - மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் இடைய...
|
|
|


