முதலாம் தரத்துக்கான மாணவர் அனுமதி: சுற்றறிக்கையை அதிபர்கள் மீற முடியாது என கல்வி அமைச்சர் காரியவசம் தெரிவிப்பு!
Thursday, January 12th, 2017
கல்வி அமைச்சின் சுற்று நிருபத்தை மீறி முதலாம் தரத்திற்கான அனுமதியை அதிபர்கள் வழங்கமுடியாது. அதேபோல பாடசாலைகளில் மாணவர்கள் அனுமதியில் பழைய மாணவர்கள் சங்கம் ஆதிக்கம் செலுத்துவதற்கும் சந்தர்ப்பம் வழங்க முடியாது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு முதலாம் ஆண்டிற்கான மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்வாங்கும் தேசிய நிகழ்வு நேற்று (11.01.2017) கொழும்பு கிரிபத்கொட விஹார மஹா தேவி மகளிர் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்தநிகழ்வில் அதிதியாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதா கிருஸ்ணன், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்,
நாங்கள் கல்வி அமைச்சு என்ற வகையில் எங்களுடைய கடமைகளை நேர்மையாக முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். நாம் எதிர்கால எமது சந்திகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு சில முக்கியமான தீர்மா னங்களை எடுக்க வேண்டியுள்ளதையும் நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

Related posts:
|
|
|


