முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள தயாரிக்கப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைச்சரவை அனுமதி!
Tuesday, June 14th, 2022
அடுத்த வருடம் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட புதிய சுற்றுநிருபத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
முன்பதாக வெளியிடப்பட்ட சுற்றுநிருப அதுல்படுத்தலின் போது எழுந்த பிரச்சினைகள் தொடர்பில், அதிபர்கள், சுற்றறிக்கை திருத்தக்குழு, கல்வியமைச்சின் விசாரணைப்பிரிவு, கையூட்டல் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட தரப்பினரால் சமர்ப்பனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் நீதிமன்ற தீர்ப்பை உள்ளடக்கிய திருத்தத்துடனான புதிய சுற்றுநிருபம் தயாரிக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, அடுத்த வருடம்முதல் திருத்தம் செய்யப்பட்ட புதிய சுற்றுநிரூபத்திற்கமைய முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
காணி உரிமங்களை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கந்தர்மடம் பகுதி மக்கள் கோரிக்கை!
மலையாளபுரம் இந்திய வீட்டுத் திட்ட முன்னேற்றம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்ப...
யுத்த நிறுத்தம் குறித்து இஸ்ரேல் பிரதமருடன் ரஷ்ய அதிபர் புடின் பேச்சு!
|
|
|


