முடிவுக்கு வந்தது கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம்!
Monday, August 8th, 2016
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவுடனான சந்திப்பை அடுத்து குறித்த வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதோடு, இதன்போது புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து நாளை (09) முதல், அவர்கள் தங்கள் பணிக்கு திரும்புவதாக உறுதியளித்துள்ளனர்.
கடந்த ஜூலை 27 ஆம் திகதி ஆரம்பமான குறித்த போராட்டம், 13 நாட்களின் பின்னர் இன்று (08) முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிறுவர் இல்லங்களை தரப்படுத்த நடவடிக்கை - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை!
நாட்டின் ஒரு பகுதியை அமெரிக்காவுக்கு காட்டிக்கொடுக்கும் உடன்படிக்கையை மேற்கொண்டது நல்லாட்சி அரசு - வ...
இலங்கையில் முதன்முறையாக மின்சார முச்சக்கரவண்டிகளை உற்பத்தி செய்யும் முழுமையான தொழிற்சாலை!
|
|
|


