முச்சக்கர வண்டி மோதி விபத்து – நெல்லியடியில் ஒருவர் பலி!
Friday, December 14th, 2018
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் நெல்லியடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டி ஒன்று துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் அல்வாய் வடக்கு பகுதியை சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
வங்காள விரிகுடாவில் வலுவடைந்து வரும் 'அசானி' புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வடக்கு மாகாண ஆளுநரின் உழவர் திருநாள் வாழ்த்துச் செய்தி!
மேற்கு அவுஸ்திரேலிய முதல்வர் ரோஜர் குக் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு - 7 ஆவது இந்து சமுத்திர மாநாட...
|
|
|


