முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு!

Tuesday, July 19th, 2022

எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைவாக கட்டணங்களை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

100 ரூபாய் என்ற முதல் கிலோ மீற்றருக்கான கட்டணத்தை குறைக்காமல் இரண்டாவது கிலோ மீட்டருக்கான கட்டணத்தை 90 ரூபாயாக குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை நேற்று முதல் குறைத்து ஐ.ஓ.சி. நிறுவனமும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்தல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தடுப்பூசி பெறாதவர்களைத் தேடி வீடு வீடாக பிரசாரம் முன்னெடுப்பு – இராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதர்ஷன...
மனித உரிமைகள் குறித்து பேசுவதற்கு முன்னர், மனிதன் ஒருவன் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது முக்கியமாக...
சவுதியின் முன்னணி ஆடை நிறுவனப் பிரதிநிதிகள் - வெளிவிவகார அமைச்சர் அல் சப்ரி சந்திப்பு - இலங்கையில் ம...